உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டியின் காலிறுதி சுற்றுப் போட்டிகள் இன்று (09) வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின்றது.
காலிறுதி சுற்றுக்கு பிரேசில், குரோசியா, ஆர்ஜென்ரீனா, நெதர்லாந்து, போர்த்துக்கல், மொராக்கோ, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இன்று வெள்ளிக்கிழமை நடக்கும் காலிறுதிப் போட்டியில் இரவு 8.30 மணிக்கு (இலங்கை நேரம்) குரோசியா – பிரேசில் அணிகள் மோதுகின்றன. சனிக்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கும் இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து அணி, ஆர்ஜென்ரீனாவை சந்திக்கிறது.
சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் மொராக்கோ அணி போர்த்துக்கல்லை எதிர்கொள்கிறது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கும் போட்டியில் இங்கிலாந்து – பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.
