அமெரிக்காவில் ஓரின சேர்க்கையாளர்களை அங்கீகரிக்க வேண்டும் எனவும் அத்துடன் ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்தையும் அங்கீகரிக்க வேண்டும் எனவும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இது தொடர்பாக அமெரிக்க பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெற்றது. இதற்கு ஒருசாரார் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இது தொடர்பான சட்டம் கொண்டு வர அமெரிக்காவில் விவாதங்கள் நடந்து வந்தது.
பல கட்ட விவாதங்களுக்கு பின்பு இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புக்கொண்டுள்ளது. இது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று நடந்தது.
இதில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்தை அங்கீகரிப்பது மற்றும் இத்திருமணங்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்குவதை பிரதிநிதிகள் சபை ஏற்றுக்கொண்டது.
பிரதிநிதிகள் சபை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து இந்த மசோதா அமெரிக்க ஜனாதிபதி
ஜோபைடன் கையெழுத்துக்கு அனுப்பப்படும்.
இந்த மசோதாவில் ஜனாதிபதி ஜோ பைடன் விரைவில் கையெழுத்திடுவார் என கூறப்படுகிறது.
