நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்.மாவட்டத்தில் காற்றுடன் கூடியமழை பெய்து வருகின்றது.
இதனால் மின் வடங்கள் (conductors/கரண்ட் கம்பிகள்) அறுந்து விழக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படும்.
இவ்வாறு அறுந்து விழுந்திருப்பது அவதானிக்கப்பட்டால், உடனடியாக மின்சாரசபைக்கு அறிவிப்பதோடு, மின்சார சபையினர் வந்து மின் இணைப்பை துண்டிக்கும் வரை அதன் அருகில் ஒருவரையும் செல்லவிடாது பார்க்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் யாழ்.மாவட்ட மின்சார சபையுடன் எந்நேரமும் தொடர்பு கொள்ளக் கூடிய இலங்கை மின்சார சபையின் தொலைபேசி இலக்கம் (021) 202 4444 அல்லது கீழ்வரும் பொருத்தமான பிரதேசங்களுக்கு ஏற்புடைய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் 0212222609
கோண்டாவில் 0212222498
சுன்னாகம் 0212240301
சாவகச்சேரி 0212270040
பருத்தித்துறை 0212263257
வட்டுக்கோட்டை 0212250855
வேலணை 0212211525
காங்கேசன்துறை 0212245400
