யாழ்.மாவட்டத்தில் நேற்று நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பிரதான வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்திருந்த நிலைமையை அவதானிக்க கூடியதாக இருந்து.
நேற்று நள்ளிரவு முதல் பிரதான வீதிகளில் முறிந்து வீழ்ந்த மரங்கள் காலையில் அப்புறப்படுத்தப்பட்டன.
அவ்வகையில் யாழ் – பலாலி பிரதான வீதியில் ஊரெழு அம்மன் கோவிலுக்கு அண்மையில் பிரதான வீதியில் மரம் ஒன்று முறிந்து வீதிக்கு குறுக்காக காணப்பட்டுள்ளது.
குறித்த மரத்தை அகற்றும் பணியில், வீட்டு உரிமையாளர்களுடன், அப்பகுதி இளைஞர்களும் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இராணுவத்தினரும் குறித்த பணியில் இணைந்து கொண்டமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.
