பிரிட்டனின் ஜெர்சி தீவின் தலைநகரான செயின்ட் ஹீலியரில் இன்று மூன்று தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென குண்டுவெடிப்புச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இக்குண்டு வெடிப்பில் கட்டிடம் முழுமையாக தரைமட்டமானது. பொலீஸார் மற்றும் மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
