கொழும்பு – கொள்ளுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியொருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து இன்று (10) இடம்பெற்றுள்ளது. வேகமாகச் சென்ற கார் வேகக் கட்டுப்பாட்டையிழந்து முன்னால் சென்ற முச்சக்கர வண்டியுடன் மோதிய குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
