மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களில் இருந்து மாட்டு இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதற்கு உடன் தடை விதித்து ஜனதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
நாட்டில் நிலவி வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு – கிழக்கு பிரதேசங்களில் கால்நடைகள் திடீரென உயிரிழப்பதால் பொது சுகாதாரத்தை உறுதி செய்யும் நோக்கில் இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
