வௌிநாடு அனுப்புவதாக தெரிவித்து பல லட்சம் ரூபா பண மோசடி செய்த இருவர் சிலாபத்தில் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
19 வயதுடைய இளைஞரும், 45 வயதுடைய பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் வௌிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் தெரிவித்து 59 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருவரும் நேற்று சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், இருவரையும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
