அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அச்சுவேலி – பத்தமேனிப் பகுதியில் வயோதிபர் ஒருவரின் கையடக்கத் தொலைபேசியை திருடன் ஒருவன் சாதுரியமாக திருடிச் சென்றுள்ளார்.
இச்சம்பவம் இன்று (10) காலை பதிவாகியுள்ளது. ஊனமுற்றவர்களுக்கு நிதி சேகரிக்கும் பாணியில் குறித்த முதியவரின் வீட்டுக்கு குறித்த நபர் சென்றுள்ளார்.
முதியவரும் குறித்த நபருக்கு முதலில் 100 ரூபா கொடுத்துள்ளார். குறித்த நபர் இது போதாது எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், முதியவர் 500 ரூபா கொடுத்துள்ளார்.
அப்பணத்தை வாங்கிய குறித்த நபர் குடிப்பதற்கு தண்ணீர் தருமாறு கேட்டுள்ளார். தண்ணீர் எடுப்பதற்கு வயோதிபர் உள்ளுக்கு சென்ற போது முதியவரின் ஐம்பதினாயிரம் ரூபா பெறுமதியான பணத்தை திருடிக் கொண்டு குறித்த நபர் சென்றுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
