சுப்பிரமணிய பாரதியாரின் 140 ஆவது பிறந்ததின நிகழ்வு இன்று (11) யாழ்.அரசடி வீதியில் அமைந்துள்ள பாரதியாரின் நினைவுத்தூபியில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் இந்திய உதவித்தூதகத்தின் எற்பாட்டில், பாரதியாரின் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ். இந்திய உதவித்தூதுவர் ராகேஸ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் கலந்துகொண்டு பாரதியாரின் உருவச்சிலைக்கு மலர்மாலையினை அணிவித்தார்.
இவ் நிகழ்வில் யாழ். இந்திய உதவித்தூதரத்தின் சிரேஸ்ட அதிகாரி ஏ.கிருஸ்ணமூர்த்தி, தமிழ் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
