ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் எதிர்வரும் 13 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் எனக் குறிப்பிட்டு இக் கூட்டத்திற்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
இக்கூட்டத்திற்கு தமிழ் கட்சிகள் சார்பில், இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோா), தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம் (புளொட்), தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.டி.பி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய ஏழு கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தமிழ் முற்போக்கு கூட்டணியும் இச்சந்திப்பில் கலந்து கொள்ளும். அத்துடன் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
