ரிக்ரொக் மூலம் அறிமுகமாகி திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியினர் ஒரு வாரத்தில் விவாகரத்து செய்வதற்கான முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த இளைஞரும் கனடாவில் வசித்து வருபவருமான யுவதியும் ரிக்ரொக் மூலம் அறிமுகமாகியுள்ளனர்.
இதன் மூலம் இருவரும் காதல் வயப்பட்ட நிலையில் கடந்தாவரம் சம்பிரதாய பூர்வமாக யாழில் திருமணமும் செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த பெண் கணவரை பிரிந்து வாழ்கின்றார் எனத் தெரியவருகிறது. கணவனின் சித்திரவதைகளைத் தாங்க முடியாமலே தான் பிரிந்து வாழ்வதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
தான் அணியும் ஆடைகளில் முதுகுப்பக்கம் தெரிவதாக கூறியே தன்னுடன் கணவர் முரண்பட்டு தன்னைத் தாக்கியுள்ளார் என யுவதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், யாழிலுள்ள பெண்சட்டத்தரணி மூலம் விவகாரத்து கோருவதற்கான முயற்சிகளை குறித்த பெண் எடுத்து வருவதாகவும் தெரிய வருகிறது.
