வடமராட்சி – வல்லைப் பகுதியில் நேற்று (10) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி பின்னர் பட்டா வாகனத்துடனும் மோதியே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில், நெல்லியடி திருமகள் சோதி பஸ் தரிப்பிட ஒழுங்கையைச் சேர்ந்த 24 வயதுடைய கோபாலகிருஷ்ணன் கவிதாசன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த இளைஞரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
