ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனான பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் தலைமையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடாவின் மேற்பார்வை தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழும் வடக்கு – கிழக்கு பிரதேசத்தில் சமஸ்டி அடிப்படையில் அதி உச்ச அதிகார பகிர்வுடனான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
இனப்பிரச்சனை தொடர்பில் மஹிந்த ராஜபக்ச காலத்தில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றது.
நல்லாட்சி காலத்திலும் பேச்சு தொடரந்தாலும் அப்போது அரசாங்கத்திற்கும் ஏற்பட்ட பிரச்சினையால் தட்டிக்கழிக்கபட்டது.
தற்போதும் இந்த பேச்சுவார்த்தை
ஐ.நா தீர்மானம், உலக நாடுகளின் அழுத்தம் அல்லது பொருளாதார பிரச்சனையில் இருந்து மீள்வதற்கான செயற்பாடாக இடம்பெறுகின்றதா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது எனவும் தெரிவித்தார்.
