வலி. மேற்கு பிரதேச சபையின், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் இன்று (12) வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே குறித்த சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டக நபர் மீட்கப்பட்ட ஆயுதங்களுடன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
