பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் போதை வஸ்துக்கு அடிமையான தந்தையால் மூன்று வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான கொடுரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மது போதையில் வீட்டுக்கு வந்த தந்தையால், மூன்று வயது மகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக தாயால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், குழந்தையை மீட்ட பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்தனர். வைத்தியசாலையில் மேற்க்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.
போதைக்கு அடிமையான குறித்த நபர் போதைப் பொருட்களை வாங்குவதற்காக மனைவியை விபச்சாரத்தில் ஈடுபட வற்புறுத்தியமையும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
