ஆப்கானிஸ்தான் எல்லை பாதுகாப்பு படையினர், பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி வந்து பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சாமன் மாவட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.
ஆப்கானிஸ்தான் படைகள் பொதுமக்கள் மீது பீரங்கி உள்பட கனரக ஆயுதங்கள் மூலம் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.
இவ் துப்பாக்கிச் சூட்டில் ஆறு பாகிஸ்தானியர்கள் உயிரிழந்ததாகவும்,17 பேர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
