கொழும்பு மாவட்டத்தில் மருதானை, தெமட்டகொடை, மாளிகாவத்தை, கிராண்ட்பாஸ் ஆகிய பிரதேசங்களில் பொலிஸார் நடத்திய விசேட சுற்றிவளைப்பில் 25 சந்தேகநபர்கள் போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்றுக் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
இதில், 8 சந்தேகநபர்கள் ஐஸ் போதைப்பொருளுடனும், இருவர் ஹெரோயினுடனும், இருவர் கஞ்சாவுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
