யாழ்ப்பாணத்திற்கும் – சென்னைக்கும் இடையிலான விமான சேவைகள் இன்று (12) மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிய விமானம் இன்று காலை 10.50 மணியளவில் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான விமான சேவைகள் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இடம்பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
