கொழும்பு மாநகரசபையினால் யாழ்ப்பாணம் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பாவணைக்காக கழிவகற்றும் 7 வாகனங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
தென்பகுதியில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையே நட்புறவை ஏற்படுத்தும் வகையில் கடந்த வருட இறுதியில் வலி.தென்மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் மற்றும் உறுப்பினர்களான
அ. ஜோன்ஜிப்பிரிக்கோ, லோ.ரமணன், சி.அனுசன், க.ஜெசிதன், நா.பகீரதன் ஆகியோர் கொழும்பு மாநகரசபைக்கு பயணம் மேற்க்கொண்டிருந்தனர்.
நட்புறவை வழக்கும் செயற்பாட்டின் தொடர்ச்சியாக இவ்வருட ஆரம்பத்தில் கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனநாயக்க உள்ளிட்ட கொழும்பு மாநகரசபை உறுப்பினர்கள் வலி.தென்மேற்கு பிரதேசசபைக்கு விஜயம் மேற்க்கொண்டிருந்தனர்.
இதன்போது, கொழும்பு மாநகர சபை முதல்வரால் வழங்கப்பட்ட உறுதிமொழியின் அடிப்படையில், கொழும்பு மாநகரசபையில் காணப்பட்ட மீள் பாவனைக்குட்படுத்தக்கூடிய நிலையில் இருந்த ஏழு வாகனங்கள் கொழும்பு மாநகரசபையால் உரிய அனுமதிகள் பெறப்பட்டு திருத்தம் செய்யப்பட்டு கடந்த 09/12/2022 அன்று கொழும்பு மாநகரசபையில் வைத்து வலி.தென்மேற்கு பிரதேசசபை தவிசாளரிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.
