ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையான இளைஞர் ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பள்ளி முனைப் பகுதியைச்
சேர்ந்த குறித்த இளைஞன், மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையான குறித்த இளைஞன் இதய வால்வில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
