மேடம் – குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் உங்களது உயர்ந்த எண்ணம் ஒன்று நிறைவேறும். நீங்கள் எதிர்பார்த்த நற்செய்தி வந்து சேரும். பயணத்தால் அலைச்சல் அதிகரிக்கும்.
இடபம் – பணியாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும். உங்களுக்கு தைரியம் அதிகரிக்கும். நேற்று முயற்சித்த செயல் இன்று நிறைவேறும். பொது இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
மிதுனம் – வார்த்தைகளில் கவனம் தேவை. நிதானத்தால் நன்மை உண்டாகும். மற்றவரின் செயல்பாட்டால் எரிச்சல் ஏற்படும். மவுனம் நன்மை தரும்.
கடகம் – வியாபாரத்தில் ஏற்பட்ட தடையை விலகும். எதிர்பார்த்த செயலில் அனுகூலம் உண்டாகும். உங்கள் திறமை வெளிப்படும். தடைபட்டிருந்த செயல்களை முடித்து லாபம் காண்பீர்கள்.
சிம்மம் – குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். புதிய முயற்சி இன்று வேண்டாம். வழக்கமான செயலில் கவனம் செலுத்துவது நல்லது.
கன்னி – நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். புதிய வேலைக்கான முயற்சி வெற்றியாகும். உங்களிடம் அன்பு செலுத்துபவர்களுக்காக செலவு செய்து மகிழ்வீர்கள்….
துலாம் – வியாபாரத்தில் இருந்த தடங்கல்களை சரி செய்வீர்கள். உங்கள் முயற்சிக்கு நண்பர்கள் உதவுவார்கள். வேலைக்காக மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும். பிறரிடம் எச்சரிக்கை தேவை.
விருச்சிகம் – உங்கள் பணிகளை மற்றவரிடம் ஒப்படைக்க வேண்டாம். தர்ம சங்கடத்திற்கு ஆளாவீர்கள். உங்கள் முயற்சி பலிக்கும். புதிய சொத்து வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள்.
தனுசு – விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் செயல்களில் சங்கடம் தோன்றி மறையும். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். பணியிடத்தில் சிறுசிறு சிக்கல்களை சந்திப்பீர்கள்.
மகரம் – உங்கள் எண்ணம் நிறைவேறும். நீங்கள் விரும்பியதை அடைவீர்கள். வாழ்க்கைத்துணை மூலம் உங்கள் முயற்சி பலிக்கும். மகிழ்ச்சியான நாள்.
கும்பம் – விலகிச் சென்றவர் உங்களைத் தேடி வருவர். நிம்மதியான நாள். திட்டமிட்டு செயல் பட்டுவீர்கள். பிறர் உங்களுக்கு உதவி செய்வார்கள்.
மீனம் – ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். பிள்ளைகள் குறித்த கவலைகள் வந்து மறையும். அந்நியரால் பணி இடத்தில் ஏற்பட்ட பிரச்னையை முடிவுக்கு வரும்.
