வடக்கு மாகாணம் உட்பட நான்கு மாகாணங்களுக்கு விரைவில் புதிய ஆளுநர்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முடிவெடுத்துள்ளார் என்று அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியமிக்கப்படவுள்ள நான்கு ஆளுநர்களில் முன்னாள் அமைச்சர்களும் அடங்குகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணம் உட்பட நான்கு மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், புதிய ஆளுநர்களாக நியமிக்கப்படவுள்ளவர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
