அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வயாவிளான் – குட்டியப்புலம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களின் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளன.
காங்கேசன்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே குறித்த கைது நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டதுடன் கைது செய்யப்பட்டவர்கள் அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சுண்ணாம்புக் கற்களுடன், உழவு இயந்திரங்களும் மீட்கப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
