தற்போதுள்ள உட்கட்டமைப்பு அலுவலக வசதிகள் மற்றும் மனித வளங்களைப் பயன்படுத்தி கூடுதல் ஒதுக்கீட்டைச் செலவிடாமல் பல மாவட்டங்களில் தற்போதுள்ள தலைநகரங்கள் மற்றும் நகரசபைகளை மாநகர சபைகளாக நியமிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, அம்பாறை மற்றும் மன்னார் மாவட்டங்களில் பிரதான நகரங்களான அம்பாறை மற்றும் மன்னார் ஆகிய இரண்டு நகரங்களை மாநகர சபைகளாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
