மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதுமலை பகுதியில் 2 400 கிலோ கிராம் மஞ்சளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மானிப்பாய் பொலிஸார் மேற்க்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இருவரும் பட்டா ரக வாகனத்தில் மஞ்சளை கடத்திச் சென்றவேளை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகப் மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
