பூரண மது விலக்கு அமுலில் உள்ள இந்தியா – பீகாரில் மதுபிரியர்கள் கள்ளச்சாராயத்தை வாங்கி குடிப்பது அதிகரித்து வருகிறது.
கள்ளச்சாராயத்தை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாலும், முழுமையாக அகற்ற முடியவில்லை.
இந்நிலையில், பீகாரின் சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ரா பகுதியில் கள்ளச்சாராயம் வாங்கி குடித்தவர்களில் 24 பேர் உயிரிழந்தனர். சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கள்ளச்சாராயம் குடித்ததால் அவர்கள் இறந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே உறுதி செய்யப்படும்.
இவ்விவகாரம் சட்டசபையில் இன்று எதிரொலித்தது. எதிர்க்கட்சியான பாஜக எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
