கிளிநொச்சி கிராஞ்சியில் கடலட்டை பண்ணைகளுக்கு எதிராக மேற்க்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்திற்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டத்திற்கான அழைப்பை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் பிரதிநிதிகள் யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ் அழைப்பை விடுத்துள்ளனர்.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் (16) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இப் போராட்டம் மேற்க்கொள்ளப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக காலை 10 மணிக்கு ஆரம்பிக்கும் போராட்டம் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நிறைவடையவுள்ளதுடன், வடமாகாண ஆளுநர் செயலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, கடற்றொழில் அமைச்சர் ஆகியோருக்கு மகஜர் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தில் வடமாகாணத்திலுள்ள அனைத்து சிவில்சமூகத்தினர் மற்றும் அரசியல் வாதிகள் பங்கேற்று போராட்டத்திற்கு ஆதரவளித்து வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
