இத்தாலியிலுள்ள கணவன் அனுப்பிய பணத்தைக் கொண்டு தனது கள்ளக் காதலனுடன் கனடாவிற்குச் செல்வதற்கு கப்பலில் சென்ற மனைவி மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணால்
மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
அண்மையில் வியட்நாம் கடற்பரப்பில் தத்தளித்த நிலையில் காப்பாற்றப்படடடுள்ள 306 அகதிகளுள் குறித்த பெண்ணும் உள்ளடங்குகிறார்.
தனது கணவனின் பெருந்தொகையான பணத்தைச் சுருட்டிக்கொண்டு கள்ளக் காதலனுடன் கனடா செல்வதற்கு கப்பலில் சென்றுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவரால் சமூக வலைத்தளத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
