கட்டாரில் நடைபெற்று வரும் உலககிண்ண கால்பந்து தொடரில் நள்ளிரவு 12.30 மணிக்கு லுசைஸ் ஐகானிக் விளையாட்டரங்கில் இடம்பெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா, குரோஷியா அணிகள் மோதின.
போட்டியின், 34வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஆர்ஜென்டினா அணியின் தலைவரும், நட்சத்திர வீரருமான மெஸ்சி முதல் கோல் அடித்து ஆட்டத்தை விறுவிறுப்பாக்கினார்.
தொடர்ந்து, 39 வது நிமிடத்தில் ஆர்ஜென்ரினாவின் மற்றொரு வீரர் ஜூலியன் அல்வொரஸ் கோல் அடித்தார். இதன் மூலம் முதல் பாதி முடிவில் ஆர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
2வது பாதியின் 69 வது நிமிடத்தில் மெஸ்சி கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி அல்வொரஸ் மீண்டும் ஒரு கோல் அடித்து ஆர்ஜென்டினாவின் வெற்றியை உறுதி செய்தார்.
இறுதியில், 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்திய ஆர்ஜென்டினா 6வது முறையாக உலக கிண்ண இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
