பருத்தித்துறை – அல்வாய் பகுதியில் அம்புலன்ஸ் வண்டி மீது காடையர் குழுவினால் தாக்குதல் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் நேற்று (14) இரவு இரண்டு குழுக்களுக்கிடையில் வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில், பலர் காயமடைந்துள்ளனர். தகவல் வழங்கப்பட்ட நிலையில் அம்புலன்ஸ் வண்டி சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்தவர்களை ஏற்றிக்கொண்டு வைத்தியசாலைக்குச் சென்றுள்ளது.
இந்நிலையில், அம்புலன்ஸ் வண்டியை மறித்த காடையர் குழு அம்புலன்ஸ் வண்டி மீது தாக்குதல் மேற்க்கொண்டுள்ளதுடன், பணியாளர்களுக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுத்தனர்.
எனினும், அம்புலன்ஸ் வண்டி காயமடைந்தவர்களை ஏற்றிக் கொண்டு வைத்தியசாலைக்கு சென்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், வைத்தியசாலையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
