மேடம் – தடைபட்டு இருந்த செயல்கள் நிறைவேறும். காலையிலேயே நல்ல தகவல் வரும். உங்கள் செயல் நீங்கள் நினைத்தபடி நிறைவேறும்.
இடபம் – சுறுசுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வியாபாரத்தில் இலாபம் கூடும். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
மிதுனம் – தடைபட்ட முயற்சி இன்று நடைபெறும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். புதிய முயற்சி பலிக்கும். அரசியல்வாதிகளின் எண்ணம் நிறைவேறும்….
கடகம் – உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வி.ஐ.பிகளின் ஆதரவால் விரும்பியதை அடைவீர். தடைபட்ட பணம் வந்து சேரும். புதிய சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
சிம்மம் – திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை ஏற்படும். நெருக்கடி நிலை விலகும். பணிபுரியும் இடத்தில் உங்கள் ஆலோசனைக்கு பாராட்டு கிடைக்கும்.
கன்னி – வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். செலவுகள் அதிகரிக்கும். வருமானத்தில் நெருக்கடி ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். அதனால் பெரும்பங்கு இலாபம் உண்டாகும்.
துலாம் – செயல்களில் லாபம் ஏற்படும். எதிர்பார்ப்பு நிறைவேறும். நிதிநிலை உயரும். லாபகரமான செயலில் ஈடுபடுவீர்கள். நீங்கள் விரும்பியதை அடைவீர்கள்.
விருச்சிகம் – வேலை வாய்ப்பிற்கான நல்ல தகவல் உங்களைத்தேடி வரும். மேற்கொள்ளும் முயற்சியில் அனுகூலம் உண்டாகும்.
தனுசு – கடந்தகால அனுபவத்தைக் கொண்டு உங்கள் செயலில் வெற்றி காண்பீர்கள். உறவினர் ஒருவருடன் மோதல் உண்டாகலாம். வார்த்தைகளில் கோபம் வேண்டாம்.
மகரம் – உங்கள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறாமல் போகும். மனவுளைச்சல் தோன்றி மறையும். புதிய முயற்சிகளையும், வெளியூர் பயணங்களையும் தவிர்ப்பது நல்லது.
கும்பம் – நண்பர்கள் ஒத்துழைப்புடன் புதிய முயற்சி பலிக்கும். பணவரவு அதிகரிக்கும். தம்பதிகளுக்குள் உண்டான பிரச்னை விலகும். குடும்பத்தில் அக்கறை செலுத்துவீர்கள்.
மீனம் – பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிரி பலமிழந்து போவார்கள். சுறு சுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள்.
