தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் உள்ள உதயநிதி ஸ்டாலின் இன்று (14) இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
இன்று காலை 9.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்ததுடன், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
அதன்படி தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். பின்னர் அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
