கொடூரமாக தாக்கப்பட்ட ஆறு வயதுக் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (13) பதிவாகியுள்ளது.
கம்பஹா – பஹல்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குழந்தையின் வயிற்றில் கடுமையான தாக்குதல் மேற்க்கொள்ளப்பட்டிருந்த நிலையில், சத்திரசிக்சை மேற்க்கொள்ளப்பட்ட போதும் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
இந்த நிலையில் குழந்தை மீது தாக்குதல் மேற்க்கொண்ட நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
