உரும்பிராய் மேம்பாட்டு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் க.பொ.சா.தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்று (15) இடம்பெறவுள்ளது.
உரும்பிராய் இந்துக்கல்லூரி மண்டபத்தில் இன்று மாலை 3.30 மணியளவில் மாணவர் கெளரவிப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
மருத்துவர் வேலும் மயிலும் கணேசவேல் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், பிரதம விருந்தினர்களாக உரும்பிராய் இந்துக்கல்லூரி அதிபர் இரட்ணம் ரவிச்சந்திரன், உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய அதிபர் கிருஷ்ணசாமி தர்மஜீலன் மற்றும் ஊரெழு கணேசா வித்தியாலய அதிபர் இரா.ஜெயக்குமார் ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
