முல்லைத்தீவுப் பகுதியில் மின்சாரம் தாக்கி 17 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு – விசுவமடுப் பத்தாம் கட்டைப் பகுதியில் உள்ள இரும்பு ஒட்டும் கடை ஒன்றிலேயே இப்பரிதாபச் சம்பவம் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்றுக் காலை (14) இடம்பெற்றுள்ளது. தேவன் கபிலன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
