சர்வதேச மருத்துவ அபிவிருத்தி நிறுவனம் (ஐ. எம். எச். ஓ.) யாழ். போதனா மருத்துவமனைக்கு மருந்துப் பொருட்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
மேலும் அந்த நிறுவனத்தின் பங்களிப்பில் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் சத்திர சிகிச்சை பிரிவு ஆகியவற்றில் அபிவிருத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சர்வதேச மருத்துவ அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் முரளி அமெரிக்காவில் இருந்து வருகை தந்து மேற்படி மருந்து பொருட்களை கையளித்தார்.
