யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் படகு ஒன்று கடற்படையினரால் சோதனையிடப்பட்ட போது தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த படகில் இருந்து 180 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், படகில் இருந்த நபரும் கஞ்சாவை கடத்தி வந்தவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்டடுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர், கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் படகு ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
