அரச சேவையில் உள்ள விசேட மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு 60 வயது பூர்த்தியான அரச உத்தியோகத்தர்களுக்கு ஓய்வு வழங்கும் வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதை அடுத்த வருடம் ஜனவரி 25 ஆம் திகதி வரை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
176 மருத்துவ நிபுணர்களால் தாக்கல் செய்யப்பட்ட 3 அடிப்படை உரிமைகள் மனுக்களை பரிசீலித்த பின்னரே இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
