மட்டக்களப்பில் பொலிசார் போதை பொருளை தடுப்பதற்கான விசேட நடவடிக்கையாக பாடசாலை மாணவர்களை சோதனையிடும் நடவடிக்கை இன்று (15) சென்மைக்கல் ஆண்கள் தேசிய பாடசாலையில் மேப்பநாய்களுடன் மாணவர்களின் புத்தக பைகள் சோதனையிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நாட்டில் மாணவர்களுக்கிடையே போதை பொருள் பாவனை அதிகரித்துள்ளமையினால் அதனை தடுப்பதற்கா நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களை சோதனையிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் கிழக்கு மாகாண சிரேஷ்டபொலிஸ் மா அதிபர் ராஜித ஸ்ரீ தமிந்த ஆலோசனைக்கமைய மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.கே.பி ஹட்டியாராச்சி தலைமையில் இன்று காலை 6.30 மணிக்கு மைக்கல் தேசிய ஆண்கள் பாடசாலையின் வாசலில் மேப்பநாய்களுடன் பாடசாலைக்குள் உள் நுழையும் மாணவர்கள் அவர்களது பைகள் என்பற்றை சோதனை மேற்க்கொண்டனர்.
