புளொட் கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் விடயங்கள் ஏதும் தெரியாமல் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கஜதீபன் விடயம் தெரியாது சும்மா கதைகிறார்.
கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுடன் இணைந்து தனியாக போட்டியிடுவது குறித்து
இறுதி முடிவை எடுக்க உள்ளோம்.
தற்போது உள்ள தேர்தல் முறையின் அடிப்படையில் நாங்கள் போட்டியிடுவோமாக இருந்தால், தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற மூன்று கட்சிகளும் தனித்தனியே போட்டியிடுவதாக இருந்தால், கூடுதலான ஆசனத்தினை பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது.
இந்த கணக்கினை அடிப்படையாக வைத்து தான் ஒரு தொழில்நுட்ப ரீதியாக நாங்கள் இதனை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றோம். இது சம்பந்தமாக செல்வம் அடைக்கல நாதனுடன், சித்தார்த்தனுடன் பேசியிருக்கின்றேன். எனவே அவர்களுடன் பேசித்தான் இந்த நாங்கள் விடயத்தினை அறிவித்திருந்தோம்.
ஆனால் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் விளக்கம் இல்லாது ஒரு கருத்தினை வெளியிட்டு இருக்கின்றார். நாங்கள் சித்தார்த்தன் மற்றும் அடைக்கலநானுடனும் பேசித்தான் இறுதி முடிவினை எடுப்போம்” – என்றார்.
