வடமராட்சி வல்லைப் பாலத்திற்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த சோளரில் இயங்கும் வீதி விளக்குகள் கம்பத்துடன் அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
5 சோளரில் இயங்கும் வீதி விளக்குகள் அடிக்கம்பத்தோடு அறுத்துச்செல்லப்பட்டுள்ளது. இக் கொள்ளை நடவடிக்கையில் ஒரு திருட்டுக் கும்பலே ஈடுபட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சோளரில் இயங்கும் வீதி விளக்கு ஒன்றின் பெறுமதி ஒன்றரை லட்சம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த வீதி விளக்குகள் கரவெட்டி பிரதேச சபையால் பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
