முன்பள்ளியில் கற்கும் 4 வயது சிறுவனுக்கு ஆசிரியர் வாயில் நெருப்பால் சுட்டார் என்று சங்கானை பிரதேச செயலக சிறுவர் விவகார பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை – துணவி பகுதியிலுள்ள முன்பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஒருவரே தீக்குச்சியால் சிறுவனின் நாடியிலும், வாயிலும் சுட்டார் என்று சிறுவனின் பெற்றோர் அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுவன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுவன் தகாத வார்த்தை பயன்படுத்தினார் என்பதால் இவ்வாறு செய்தார் என்றும், சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்று சங்கானை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் தெரிவித்தார்.
