ஜனசக்தி குழுமத்தின் தலைவரும் பிரபல வர்த்தகருமான தினேஷ் ஷாப்டர் கடத்தப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸாரும், குற்றப் புலனாய்வு பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடத்தப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் காருக்குள் இருந்து மீட்கப்பட்ட தினேஷ் ஷாப்டர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் நேற்று (15) இரவு உயிரிழந்தார்.
