மேடம் – இன்று கோயிலுக்கு செல்வீர்கள். இழுப்பறியான வழக்கு உங்களுக்கு சாதகமாகும். செயலில் உற்சாகம் இருக்கும். உறவினர் ஒருவரால் ஏற்பட்ட சங்கடம் மறையும்.
இடபம் – மதியம் வரை நெருக்கடிகளை சந்திப்பீர்கள். அதன்பின் உங்கள் விருப்பம் நிறைவேறும். உறவினர் ஒருவரால் உங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
மிதுனம் – புதிய முயற்சி இன்று வேண்டாம். வழக்கமான செயலில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர் ஒத்துழைப்பால் உங்கள் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
கடகம் – குடும்பத்தினர் விருப்பம் அறிந்து செயல்படுவீர்கள். சகோதரர்களால் நன்மை ஏற்படும். வாக்கு வன்மையால் உங்கள் முயற்சி பலித்தாமாகும். நிதிநிலை உயரும்.
சிம்மம் – இன்று உங்கள் செயல் காலையில் இழுபறியாக இருக்கும். அதன்பின் நடந்தேறும். உங்களுடைய நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். யாரிடமும் வாக்குவாதம் ஏற்படும்.
கன்னி – காலையில் வீண் செலவுகளால் நெருக்கடி உண்டாகும். மதியத்திற்கு மேல் நிதிநிலை சீராகும். நண்பர் ஒத்துழைப்புடன் ஈடுபட்ட செயலில் முன்னேற்றம் காண்பீர்கள்.
துலாம் – இன்றைய உங்கள் செயல் இழுபறியானாலும் மதியத்திற்கு மேல் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத செலவுகளை இன்று சந்திப்பீர்கள். நிதானமாக செயல்படுவீர்கள்.
விருச்சிகம் – உங்கள் செயலில் வேகம் இருக்கும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பீர்கள்.
நீங்கள் எதிர்பார்த்த பணம் உங்களைத் தேடி வரும். முயற்சியில் அனுகூலம் உண்டு.
தனுசு – எதிர்காலம் கருதி எடுத்த முயற்சி நிறைவேறும். கோயில் வழிபாட்டை மேற்கொள்வீர். சேமிப்பில் கவனம் செலுத்துவீர். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள்.
மகரம் – இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி இன்று மதியத்திற்கு மேல் விலகும். முயற்சி செய்தும் நிறைவேறாமல் இருந்து வந்த செயல் இன்று நிறைவேறும்.
கும்பம் – மதியத்திலிருந்து சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் கவனம் தேவை. காலையில் இருக்கும் உற்சாகம் குறையாமல் பார்த்து கொள்ளுங்கள்.
மீனம் – உங்கள் விருப்பம் நிறைவேறும். நட்புகள் வழியே நன்மை அதிகரிக்கும். கோயில் வழிபாட்டில் மனம் செல்லும். உங்கள் எண்ணத்தில் ஒன்று நிறைவேறும்.
