மேடம் – உங்கள் முயற்சி பலிதமாகும். தடைகளைக் கடந்து சாதிப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை அகலும். புதிய முயற்சியில் அனுகூலம் ஏற்படும்.
இடபம் – பிள்ளைகளின் வளர்ச்சி உங்களுக்கு பெருமையை உண்டாக்கும். மகிழ்ச்சியான நாள். நேற்றைய செய்கையால் லாபம் உண்டாகும். உங்களால் குடும்பத்திற்கு பெருமை ஏற்படும்.
மிதுனம் – நேற்று ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். உங்கள் விருப்பப்படி நீங்கள் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
கடகம் – தொழிலில் இருந்து வந்த தடை விலகும். பொருளாதார நிலை உயரும் நாள். சிந்தித்து செயல்படுவதால் நீங்கள் ஈடுபடும் செயல் முன்னேற்றம் அடையும்.
சிம்மம் – பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை சரியாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும் நாள். தொழிலில் உண்டான போட்டியை சரி செய்வீர்கள். உங்கள் முயற்சிக்கு ஏற்ப பலனுண்டு.
கன்னி – பணி புரியும் இடத்தில் எதிர்பார்த்த நற்பலனை பெறுவீர்கள்.மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். முயற்சியில் இருந்த தடை விலகும். குலதெய்வ அருளால் நினைத்தது நிறைவேறும்.
துலாம் – குடும்பச்செலவுக்கு பணத்தேவை அதிகரிக்கும். போராடி சமாளிப்பீர்கள். மனதில் குழப்பம் அதிகரிக்கும். உங்கள் கவனக் குறைவால் செலவுகளை சந்திப்பீர்கள்.
விருச்சிகம் – இழுபறியாக இருந்த செயல் இன்று நிறைவேறும். வரவேண்டிய பணம் வந்து சேரும். பிரபலங்களின் துணையுடன் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். சிக்கல் தீரும்.
தனுசு – தொழிலில் உண்டான நஷ்டத்திற்கு தீர்வு காண்பீர்கள். உங்கள் அணுகுமுறையில் இலாபம் ஏற்படும். வேலை தேடி வந்தவர்களின் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். மனம் சோர்வடையும்.
மகரம் – தடைகளை விலக்கி உங்கள் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். நிதிநிலை உயரும். திட்டமிட்டபடி செயல்படுவீர்கள். நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி இன்று நிறைவேறும்.
கும்பம் – நம்பிக்கையுடன் செயல்பட்டு நீங்கள் ஒரு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பணியில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர்கள். குடும்பத்தினர் உதவியால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.
மீனம் – தடைபட்டிருந்த முயற்சி இன்று நடந்தேறும். எதிர்பார்த்த நன்மைகளை பெறுவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் மனம் மகிழும்படியான சம்பவம் ஒன்று நடைபெறும்.
