கிளிநொச்சி – கிராஞ்சி மீனவர்களின் சட்டவிரோத கடலட்டை மீன்பிடிக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (16) யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக காலை 10 மணிக்கு ஆரம்பித்த போராட்டம், வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு பேரணியாக சென்று நிறைவடைந்தது.
குறித்த போரட்டத்தில் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், அரசியல் வாதிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
