ரஷ்யா- இர்குட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள அங்கார்ஸ்க் நகரில் அங்கார்க் பெட்ரோகெமிக்கல் நிறுவனத்துக்குச் சொந்தமான எண்ணெய் ஆலையில் நேற்று (15) திடீரென தீப்பற்றியது.
இந்தத் தீ மின்னல் வேகத்தில் பரவியது. உடனடியாக தீயணைக்கும் படையினர் வரவழைக்கப்பட்டு பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்தில் 2 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
