காதலியின் அந்தரங்க புகைப்படங்களை வைத்து அச்சுறுத்தி பணம் வாங்கியதாக காதலன் மீது வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா – உக்கிலாங்குளம் பகுதியைச் சேர்ந்த யுவதியை காதல் ஆசை காட்டி காதலிப்பது போல் ஏமாற்றி காதலியின் அந்தரங்கப் புகைப்படங்களை பெற்ற காதலனான குறித்த இளைஞன், அப்படங்களை வைத்து யுவதியை அச்சுறுத்தி பணம் பெற்று வந்துள்ளார்.
அத்துடன், குறித்த காணொளிகளை காதலனான இளைஞன் தன்னுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரால் இளைஞன் மீது வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
