கட்டாரில் நடைபெற்றுவரும் 22ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டி சூடு பறக்கத் தொடஙகியுள்ளது.
இந்நிலையில், உலக கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்சும், ஆர்ஜென்டினாவும் இன்றிரவு லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் மோதி வருகின்றன.
போட்டியின் ஆரம்பத்தில் அதிரடி காட்டிய ஆர்ஜென்ரினா 2 கோலைப் பெற்று அதிரடி காட்டியது. போட்டியின் பிற்பாதியில் அசுர வேகம் கொண்டு ஆடி வரும் பிரான்சு அணி 2 கோலை அடித்து போட்டியே சமநிலைப் படுத்தியுள்ளது.
இந்நிலையில் 2:2 எனற கோல் கணக்கில் இரண்டு அணிகளும் விறுவிறுப்பாக மோதி வருகின்றன.
